ஒரு நச்சு உறவில் இருந்து வெளியேற 10 குறிப்புகள் – How to get rid of a toxic relationship in tamil

அன்புதான் தேவை என்று நம் அனைவருக்கும் சொல்லப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அன்பு என்பது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

காதல் என்ற வார்த்தை என்னவோ கேட்பதற்க்கு நன்றாக த்தான் இருக்கிறது, ஆனால் ஒரு உறவில் நமக்கு எல்லாமே தேவை. நமக்கான இடம் தேவை, நமக்கான மரியாதை தேவை, அன்பில் இருக்கிறோம் என்றால் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் உங்களுக்கு மறுக்கப்பட்டால், நீங்கள், ஒரு நச்சு உறவில் சிக்கி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
How to get rid of toxic relationships in tamil.

​​அத்தகைய உறவுகள் குழப்பமானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பல டாக்சிக் பார்ட்னர்கள் உங்களின் நிம்மதியை குலைத்து, உங்களின் கவனத்தையும் நேரத்தையும் அவர்களை தேடி ஏங்க வைப்பதன் மூலம் உங்களை கவர்ந்திழுக்க பல விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்.

இது நகர்வதற்கான கடினமான பிரதேசம் தான். இருப்பினும், உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கீழே போட்டு மிதிக்கும், நச்சு உறவை விட்டு வெளியேறுவதற்கான சகல உரிமைகளும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், நீங்கள் இதனை செய்துதான் ஆக வேண்டும். உங்கள் மன அமைதிக்காக அந்த உறவுகளை நீங்கள் துண்டிக்க வேண்டும். Tips To Get Out Of A Toxic Relationship in tamil.

உங்கள் உறவுக்குள் மூச்சுத்திணறல் அடைவதாக நினைக்கிறீர்களா? ஒரு நச்சு உறவிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை நாம் படிப்படியாக பார்க்கலாம்.

 

நச்சு உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள்

 

எந்த உறவாக இருந்தாலும் அது தாங்க முடியாத வலி தருகிறது என்பது உண்மையானால்.. உங்கள் நச்சு உறவுடன் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இணைந்திருந்தாலும், அந்த நச்சு உறவிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது. பெரும்பாலும், ஒரு மோசமான உறவு நமக்கு ஏற்படுத்தும் தீங்கை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.

இது நமது மன ஆரோக்கியம், நமது அன்றாட வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது. பெரும்பாலும், இது ஒரு நபராக நாம் யார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. டாக்சிக் உறவில் உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லை.

ஒரு நச்சு உறவில் இருந்து வெளியேற 10 படிகள் இங்கே: (how to get rid of that toxic relationship in tamil.)

 

சிவப்பு கொடிகள் அடையாளம் – Red flags

நீங்கள் இருக்கக்கூடாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்றாலும்.. இப்போது உங்கள் மனதை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதற்காக, உங்கள் நேசத்துகுரியவரின் சிவப்பு கொடிகளை அடையாளம் காண வேண்டும். (Symptoms of red flags in tamil.)

ஒரு நச்சு உறவை எப்படி கையாள்வது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இந்த சிவப்பு கொடிகளை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் நீங்கள் அதனை தொடங்கலாம்:

நீங்கள் அவரோடு பேசும்போதும் இருக்கும்போதும் முட்டை ஓடுகளில் நடப்பது போல் உணர்கிறீர்களா?

பேச்சின் முடிவில் டெடிகேஷன் பற்றி வரும் போதெல்லாம் பொறுப்பு துறப்பு என அவர்கள் உங்களை விட்டு நகர்கிறார்களா?

இந்த உறவின் மீதான உங்கள் கவலைகள் பற்றிய விவாதம் எப்போதும் ஒரு வாதத்துடன் முடிவடைகிறதா?

அவர்களுக்கு வசதியாக இருக்கும்போது மட்டுமே அவர்கள் உங்களிடம் வருகிறார்களா?

அவர்கள் அடிக்கடி உங்களுடன் சின்னச் சின்ன சண்டையில் ஈடுபடுவார்கள், அவர்கள் தவறு செய்தாலும் அரிதாகவே மன்னிப்பு கேட்பார்கள். சரிதானே?

உறவில் இருந்தாலும் நீங்கள் எப்போதும் தனியாக உணர்கிறீர்களா?

நீங்கள் சரியான கவலைகளை எழுப்பும்போது கூட நீங்கள் எப்போதும் அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்று அவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள்.

அவர்கள் பொறாமை அல்லது உடைமை குணம் உடையவர்கள் என்பதை உணர்கிறீர்களா?

நீங்கள் செய்யத் தயங்கும் காரியங்களைச் செய்ய அவர்கள் அடிக்கடி உங்களைத் தள்ளுகிறார்களா?

அவர்கள் உங்களை அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களை அடிக்கடி குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்களா?

அவர்கள் பெரும்பாலும் பொய் சொல்கிறார்களா?.

அவர்கள் உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை யா?மற்றும் உங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறதா?

மேற்கூறியவற்றில் எல்லாவற்றுக்கும் உங்களுக்கு ஆம் என்ற பதில் இருந்தால்.. நிச்சயம் நீங்கள் மிகப்பெரிய நச்சு பாம்பின் கீழ் அழுத்தப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.

 

அடுத்து என்ன செய்வது?

உங்கள் உணர்வுகளைப் பதிவு செய்யவும்

ஒரு நச்சு உறவு நம் வாழ்வை பறிக்கும்போது, ​​எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்று கற்பனை செய்வதை முதலில் நிறுத்துங்கள். எதிர்கால கனவில் நிகழ்காலத்தில் நடக்கும் கெடுதல்கள் அனைத்தையும் நாம் மறந்துவிடுகிறோம்.

இதனால்தான் நீங்கள் ஒரு நச்சு உறவில் இருந்து வெளியேற விரும்பினால் உங்கள் உணர்ச்சிகளை முதலில் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் உங்களை காயப்படுத்தும்போது அல்லது அவர்களின் செயல்களால் உங்களுக்கு மூச்சுத்திணறும்போது, ​​அது உங்களுக்கு எவ்வளவு மோசமாக ஒன்றாக இருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்வது முக்கியம்.

 

அடுத்து உங்கள் நல்வாழ்வில் கவனம் செலுத்துங்கள்

காதல் பெரும்பாலும் நம்மை மீண்டும் மீண்டும் எரிகின்ற தீயின் மேல் அமர வைக்கிறது . நமக்கு நாம் முக்கியமானவர்கள் என்பதை மறந்து இந்த மனதானது உடன் வரும் உறவிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. நச்சு உறவுகளோ அல்லது நல்ல உறவுகளோ எதுவாக இருந்தாலும் இது ஒரு மோசமான நடைமுறை.  நமக்கு நாம் முதலில் முக்கியமானவர்கள். (Ways Of Ending Toxic Relationships in tamil)

ஆரோக்கியமான உறவுகளைத் தக்கவைக்க நீங்கள் முதலில் உங்கள் சொந்த நலனில் கவனம் செலுத்த வேண்டும். தவிர உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் அதே விதத்தில் தான் நீங்கள் மற்றவர்களாலும் நடத்தப்படுவீர்கள்.

இப்படிப்பட்ட மோசமான உறவிலிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசிக்கிறீர்களா? சிம்பிள். இனியாவது உங்கள் நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

அவர்கள் இல்லாத வாழ்க்கையை காட்சிப்படுத்துங்கள்

நச்சு உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிக முக்கியமான பகுதி உங்கள் பங்குதாரர் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது மிக உதவி செய்யும்.. அவர்கள் தலையீடு இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து அற்புதமான விஷயங்களையும் பற்றி சிந்தியுங்கள். (Ways to identify negative peoples in tamil)

உங்களின் உண்மையான தன்மைக்காக உங்களை நேசிக்கும் ஒரு நபருடன் உங்கள் வாழ்க்கை அமையுமானால் வாழ்க்கை எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.

 

தேவைப்பட்டால் ஆதரவைத் தேடுங்கள்

ஒரு நச்சு உறவை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்று குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களிடம் பேசி ஆதரவை தேடுங்கள். நமக்காக வேறு சிலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அந்த டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளி வர ஊன்றுகோலாக இருக்கும். (Everything To Know About Love Bombing in tamil)

உங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களை அணுகவும்.

 

துளைகளை நிரப்பவும்

நச்சுப் பார்ட்னரிடம் இருந்து உங்களைத் தூர விலக்கத் தொடங்கி விட்டீர்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் இல்லாத வெறுமையை நீக்க நீங்கள் நல்ல மனிதர்கள் மற்றும் தர்ம செயல்பாடுகளால் நிரப்பத் தொடங்குங்கள். (Signs You Are In A Toxic Relationship in tamil)

படிக்கத் தொடங்குங்கள், உடற்பயிற்சி கூடத்தில் அதிகமாக வொர்க் அவுட் செய்யுங்கள், உங்கள் நண்பர்களிடம் அடிக்கடி பேசுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எல்லாவற்றையும் அதிகமாகச் செய்யுங்கள். ஒரு நச்சு உறவை எப்படி முடிப்பது என்பது கேள்வி என்றால், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வது என்பது தான் பதில்.

 

இதுவே சிறந்த நேரம்

இப்போது உங்களிடம் ஒரு நட்பான ஆதரவு அமைப்பு மற்றும் எதிர் பார்க்க வேண்டிய விஷயங்கள் இருப்பதால், நீங்கள் உங்களை வலிமையானவராக உணர வேண்டும். உங்கள் டாக்சிக் பார்ட்னருடன் உறவை துண்டிக்க இதுவே சிறந்த நேரம்.

மேலும், நீங்கள் எப்போதும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் இடத்தில் இந்த ப்ரேக்கப்பை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தவுடன், அவர்களை உங்களை மீண்டும் அணுகி விடாமல் இருக்க எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைத் தடுக்கவும்.( Toxic Relationship Habits in tamil)

 

உங்களை சுலபமாக நகர்த்தி செல்லுங்கள்

ப்ரேக்கப்பும் செய்தாயிற்று. ஆனால் அதற்கப்புறம்தான் வாழ்வின் கடினமான பகுதி வருகிறது. இங்கே உண்மையான கேள்வி என்னவெனில் ஒரு நச்சு உறவில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது அல்ல .

மாறாக உறவு முறிவுடன் வரும் வலி மற்றும் வெற்றிடத்தை எப்படி சமாளிப்பது என்பதுதான்.

இந்த இடத்தில் அழுகை வருகிறதா அழுங்கள்.. சபிக்க வேண்டுமா சபியுங்கள். உங்களுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. நீங்கள் எதை உணர்கிறீர்களோ அது இயற்கையானது, அதை அப்படியே போக விடுங்கள்.

அவ்வளவுதான்.. எல்லாம் நலமாக முடிந்தது.

இறுதியாக சில எச்சரிக்கை குறிப்புகள்

இந்த நேரத்தில் ரிவெஞ்ச் எடுப்பதற்காக உடனடியாக இன்னொரு நபருடன் டேட் செய்யாதீர்கள்.

ஏன் எனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது நீங்கள் விட்டுச் சென்ற உறவைப் போலவே நச்சுத்தன்மையுடைய ஒன்றாக இருக்கலாம். மீண்டும் உங்களை மனம் நொறுங்க வைக்கலாம்.

எல்லாவற்றிலிருந்து வெளியேற.. எல்லா காயங்களும் ஆற சில காலம் கொடுங்கள். உங்களோடு துணையாய் இருங்கள்.

எல்லாம் மாறும். நாம் காத்திருப்பு என்பது  நியாயமாக இருப்பின் சரியான நபர்கள் நம் உடன் இணைவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top